”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் சம்பளம் தருவோம்…’’ என கமலஹாசன் கூறிவருகிறார். எல்லாவற்றையும் விலைக்கு வாங்க முடியும்! ஆனால், தாய் பாசத்தை, மனைவியின் நேசத்தை, உண்மையான அன்பை ஒரு போதும் விலைவைக்க முடியாது… என்பது பொதுவாகவே அடிக்கடி வெளிப்படும் சொல்லாடல்களில் ஒன்று தான்! இன்றைய மனைவி என்ற பெண்சமூகம், கணவன் எனப்படும் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறது…? என்ற அடிப்படை புரிதலாவது உண்டா..காலமெல்லாம் பிளேபாயாக வாழ்ந்த கமலஹாசனுக்கு…? குடும்ப உறவுகளில் ஆண்,பெண்களுக்கு இடையே நிலவிடும் ஏற்றத் தாழ்வுகள் என்ன? எப்படிப் பெண்ணை சுய மரியாதைக்குரியவளாக ...