‘’ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு கமிஷன் போட்டால் சரியாயிடுமா..?’’ ‘’இந்த நாட்டுல எவ்வளவு கமிஷன்கள் போட்டு இருக்காங்க..! அந்த கமிஷன் அறிக்கைகளைக் கூட வெளியிடாமால் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொள்வதெல்லாம் நடந்திருக்குதே..!’’ ‘’கமிஷன் அறிக்கையை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பத் தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாதே!’’ ‘’அப்ப என்ன சார் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்குமா..?’’ இப்படியான சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன! மேற்படி சந்தேகங்களை எழுப்புவதற்கான கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல ...

நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால், ’’நிச்சயமாக எதிர்க்கிறேன்’’ என்பது தான் என்னுடைய பதில்! ’’கல்வி என்பது மாநில அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? மத்திய அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?’’ என்றால்,சந்தேகமே இல்லாமல் சொல்வேன்; ’’மாநில அரசின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்! அதே சமயம் ,மத்திய அரசிடம் ஆலோசனை கலந்து செயல்பட வேண்டும்!’’ ஆனால்,தற்போது தமிழகத்தில் நடைபெறும் நீட் தொடர்பான உணர்ச்சிகரமான அரசியல் நாடகங்கள் சகிக்க முடியாதவை! கடந்த மூன்றாண்டுகளில் அனிதா தொடங்கி தற்போது ஜோதி துர்கா,ஆதித்யா,மோதிலால் வரை 16 மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? யார் இதற்குப் பொறுப்பேற்பீர்கள்? ...