அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை ...