தேசத்தின் வளர்ச்சி தான் முக்கியமாம்! அந்த தேசம் என்பதில் மக்கள் உள்ளடங்கியுள்ளார்களா? அல்லது பெருமுதலாளிகள் மட்டுமே கொண்டது தான் தேசமா? பெருமுதலாளிகளின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதாகக் கருதும் பாஜக அரசிடம் வேறு எப்படிப்பட்ட பட்ஜெட்டை நாம் எதிர்பார்க்கமுடியும்? பெரும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பெட்ரோலுக்கு கூடுதல் புதிய வரி விதிப்பு, சமானிய மக்களுக்கு வருமான வரி வரம்பு உயர்த்தப்படாது போன்றவற்றை படிக்கும் பொழுது இது யாருடைய வளர்ச்சிக்கான பட்ஜெட் என்பதில் நமக்கு எந்தக் குழப்பமும் வராது! ...