கண்டே பிடிக்கமுடியாத கைலாசா என்ற தனி நாடு, அதற்கான கரன்சி, தங்க நாணயம், ரிசர்வ் வங்கி, அந்த நாட்டுக்கான சட்டதிட்டங்கள், கொள்கைகள் ,இது உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்குமான தேசம்….இங்கே முக்கிய பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள்…போன்ற அறிவிப்புகள்… என்று அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உலகமே கொரோனா பிரச்சினையில் துவண்டு கொண்டிருக்க, குழந்தைகள் கடத்தல்,பாலியல் புகார்,கொலைவழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவரான நித்தியானந்தாவால் எப்படி இவ்வாறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட முடிகிறது என்பது இருக்கட்டும் ...