திமுக தேர்தல் அறிக்கை குறித்த நல்லவை, தவிர்த்திருக்க வேண்டியவை, விடுபட்டவை, ஆபத்தானவை ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து நேற்று அறம் இணைய இதழில் எழுதி  இருந்தோம். அது பெரிய அளவு வைரலானது. பத்திரிகையுலக நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்களை கவனப்படுத்தி உள்ளீர்கள். இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நிச்சயம் விடுபட்ட ஒரு சில அம்சங்கள் சேர்க்க வாய்ப்புள்ளது என்றனர். இதையடுத்து வேறு சில திமுக நண்பர்களும் தோழமை உணர்வுடன் பேசினர். நாம் சுட்டிக்காட்டியது போலவே எட்டுவழிச் சாலை போராட்ட ...