மீரான் மைதீன்  எழுதியிருக்கும் புதிய நாவல் ‘ஒச்சை’. கன்னியாகுமரி மாவட்டத்தின், ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மிக உயிர்ப்புடன் எழுதியுள்ளார்! ஒச்சை என்று சொல்லுக்கு இரைச்சல் என்று பொருள். வளைகுடாவில் பணிபுரியும் மாந்தர்களை  ‘அஜ்னபி’ நாவலில் காட்சிப்படுத்தியவர் மீரான் மைதீன். அவருடைய உரையாடலும், பாத்திரங்களின் சித்தரிப்பும், எள்ளலும் இந்த புதிய நாவலிலும் தொடர்கிறது. யாராலும் புறக்கணிக்க முடியாத இடத்தை தமிழ் இலக்கிய உலகில் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். ‘ஒச்சை’ கதையின் நாயகன் கோயா. ஆனால் கோயாவின் நிஜப்பெயர் நூர்தீனோ அல்லது கமர்தீனோ. ‘ஏகதேசம் ...