தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், அதை நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகுகிறதா..? என்ற கேள்வியும், வேதனையும் தேர்வு எழுதும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது! தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு ...