இருப்பதிலேயே மிகக் கடினமான, சவாலான பணி என்பது துப்புரவு தொழில் தான்! ஆனால், மிகக் குறைவான சம்பளம் பெறுவதும் துப்புரவு தொழிலாளிகள் தான்! தற்போது அந்த சம்பளத்தையும் குறைக்க திட்டமிட்டுள்ளது தான் அதிர்ச்சியளிக்கிறது! ”இப்ப வாங்குற சம்பளத்தை தொடர முடியாது, இது தான் கூலி இருந்தா இரு..’’ என்று சொல்லும் ஆணவத்தை தமிழக அதிகாரிகளுக்கு தந்தது யார்? ”துப்புரவு தொழிலாளியாக வாழ விரும்பிய காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாளில் தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்க நகராட்சிகளின் நிர்வாக ...