மனிதன் பிறப்பு தொடங்கி உடல் அடக்கம் வரை முக்கியத்துவப்படுவதால்,  பால் புனிதமாகக்  கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உயிர் காக்கும் அத்தியாவசிய உணவான பால் உற்பத்தி இன்றைய தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் எளிய விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாகத் தமிழக அரசின்  கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் நிர்வாகத்தை நம்பி சுமார் 4,60,000 ஆயிரம் எளிய பால் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல,சுமார் 1,50,000 பால் முகவர்களும் உள்ளனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவினில் தற்போது ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் காட்டாற்று வெள்ளமாக ஓடுகிறது! ஒரு லிட்டர் ...