இன்னும் எத்தனை காலம் தான் இப்படி சொல்லிக் கொண்டே இருக்க போகிறார்களோ..? அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த வேண்டும்! தமிழ் அரசாங்க அலுவலக பயன்பாட்டில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்! இது ஏதோ ஒரு புதுத் தமிழ் மொழி புரட்சிப் போலத் தோன்றும். ஆனால், மெட்ராசு அலுவல் மொழி சட்டம் – 1956 என்பதன்படி தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 லேயே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஜனவரி – 23,1957 ல் தமிழ்நாடு ...