ஒரு வயதான மூதாட்டியை அவருடைய பேரன் கையை பிடித்து நான் இருக்கும் இடதிற்கு அருகே அழைத்து வருவான். ஸ்டேட் வங்கியின் அலுவலர் அவருக்கு ஆயிரம் ரூபாயை தருவார். அநேகமாக அது இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களாக இருக்கும். அந்தத் தொகையை வாங்கும் போது அந்த மூதாட்டியின் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைக் காண எனக்கு இரண்டு கண்கள் போதாது. இதனை வாங்கியவுடன் அருகிலுள்ள கடைக்கு, தனது பேரனை அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவார். இது மாதந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. இப்படி முதியோர் ஓய்வூதியம் வாங்கும் ...