‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பது ‘எதிர்கட்சிகள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏக்களை விலை பேசி, ஆட்சியை கவிழ்த்து  அதிகாரத்திற்கு வருகிறது பாஜக! அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை பாஜகவிற்கு அடியாள் வேலை செய்கிறதா..? ஆகஸ்ட் 17 அன்று இமாச்சல பிரதேசத்தை சார்ந்த லக்வின்தர் ரானா மற்றும் காஜல் என்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக சில நாட்களுக்கு முன்தான் காஜல் நியமிக்கப்பட்டார் என்பது ...

நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பிறகு, 250 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தினோம்! அதன் பிறகு காந்திய சீடர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, தற்போது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளால் மீண்டும் அடிமை அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளது! அதற்கு தோதாக நசுக்கப்படுவதே மாநில உரிமைகள்! மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமைகளில் தலையிட்டு ஜி.எஸ்.டி எனக் கொண்டு வந்தார்கள்! மாநில வருவாயை அபகரித்துக் கொண்டு நம்மை மத்திய ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்கிறார்கள்! மாநிலங்களின் வசமிருந்த கல்வி அதிகாரத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியே புதியகல்விக் கொள்கையும், நீட் தேர்வு ...