எதற்கு ஒரு மாத இடைவெளி..தேர்தல் தீர்ப்பைச் சொல்ல? ஒன்றிரண்டு நாளில் எண்ணிச் சொல்ல வேண்டிய தீர்ப்புகளை ஒரு மாதம் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை என்னென்பது? தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லோர் மனமும் பதைபதைப்போடு தான் உள்ளது. எந்த நேரம் என்ன நடக்குமோ..? தீர்ப்புகள் திருத்தப்படுமா…? வாக்குமெஷின்களில் கோல்மால் செய்துவிடுவார்களோ..? ”சார் வெளியில் இருந்து கொண்டு ரீமோட் மூலம் கூட தேர்தல் தீர்ப்பை மாற்றலாம் தெரியுமா?’’ என்று குண்டை தூக்கிப் போட்டார் ஒரு பத்திரிகையாளர். சுப்பிரமணிய சுவாமியே சொன்னார். ஓட்டுமெஷினில் எவ்வளவு கோல்மால் செய்யமுடியும் என்று!  ...