இன்று அதிகாலை கொரானாவின் பின் விளைவுகளால் வீழ்த்தப்பட்டு அகமது பட்டேல் மறைந்த செய்தி வேறு எவரையும் விட சோனியா, ராகுல்,பிரியங்கா முவரையும் மிக அதிகமாகவே பாதித்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தில் ஒருவராக தன்னை சுமார் 35 ஆண்டு காலம் பிணைத்துக் கொண்டு வளைய வந்தவர் அகமது பட்டேல்! ராஜீவ்காந்தி எதிர்பராவிதமாக அரசியலுக்குள் நுழைந்த போது அவர் தனக்கு ஆப்த நண்பனாக அடையாளம் கண்டது அகமது பட்டேலைத் தான்! அகமது பட்டேலைத் தான் ராஜீவ் காந்தி தனது ஆட்சியில் பாராளுமன்ற செயலாளராக வைத்துக் கொண்டார். ...