ஆளுநரிடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும்…என்கிறார் அமைச்சர் ரகுபதி. முதல்வரோ மெளனம் சாதிக்கிறார்! இளைஞர்களை தற்கொலைகளுக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் மறுப்பதன் பின்னணி என்ன? இளைஞர்களைக் கடுமையாக பாதிக்கும், எதிர்காலத்தையே  சூறையாடும், தற்கொலைக்குத் தூண்டி குடும்பங்களை நிர்மூலமாக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் அனுமதிக்க மறுத்துள்ளார்! கொஞ்சக் காலம் அதைக் கிடப்பில் போட்டு ஆளுநர் மறுத்தது ஒரு அநீதி என்றால், மறுத்த ஆளுநரை ...