தடுப்பூசியின் பயனின்மை மற்றும் பாதக விளைவுகளால் ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் கட்டமைத்த மாயைகள் தகர்ந்து வருகின்றன! அதனால், ”இதை விரும்பாதவர் களுக்கு திணிக்காதே, அறிவியலின் பெயரால் அராஜகத்தை அரங்கேற்றாதே..”என மருத்துவர்களே கூட்டாக களம் காண உள்ளனர்! ” விரும்பாதோருக்கு தடுப்பூசியை திணிக்காதே” ”மக்களை சோதனை எலிகளாக்காதே” ”என் உடம்பு, என் உரிமை,” ”அச்சத்தை விதைக்காதே, அறிவியலை மக்களுக்கு எதிராக மாற்றாதே” என்ற கோஷங்கள் உலகம் முழுமையும் வலுப்பெற்று வருகின்றன! கனடாவில் பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டும், முக்கிய சாலைகளை தடுத்தும் மக்கள் நடத்தும் போராட்டம் 50 ஆண்டுகளில் ...

எளிய மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல அடுத்தடுத்து அமைதியைக் கெடுக்கும் சட்டங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக அரசு! இந்த மீன்வள மசோதாவோ மீனவர்களை கடலுக்கே அன்னியமாக்கி கண்ணீரில் தள்ளுகிறது! உலக மீனவர் தினம் இன்று சர்வதேச அளவில் மீனவர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் கூடி பாராளுமன்றம் முன்பு மீனவர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். மீனவ மக்கள் நலன் தொடர்பாக அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ...

”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. # ...

அரசாங்க சொத்துக்களையெல்லாம் தங்கள் ஆத்மார்த்த நண்பர்களுக்கு அள்ளி எடுத்து தந்து கொண்டுள்ளது பாஜக அரசு. தேசீய பணமாக்கல் திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் -பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு கொடுப்பதன் மூலம்-திரட்டப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்ததற்கு எதிராக இன்று தமிழக சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசின் சமூக விரோத செயல்பாடுகளை யார் தடுப்பது,எப்படி எதிர்ப்பது என இந்தியாவே திகைத்து நிற்கையில். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ...

இருபதாண்டு கால அந்நியர் ஆக்கிரமிப்பு! ஆட்சியாளர்களின் அதி மோசமான முறைகேடுகள்! அமெரிக்க ஆதரவுள்ள படித்த மேல்தட்டுவர்க்கத்தின் ஆடம்பரமான, ஊதாரித்தனமான வாழ்க்கை.. போன்றவற்றை பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களில் சிலர், ‘கொள்கை வெறியுடன் மலைமுடுக்குகளில் மறைந்திருந்து உயிர் கொடுத்து போராடிய தாலிபான்கள் வந்தால் வரட்டுமே’ என்று நினைத்தது உண்மைதான்! ஆனால், தற்போது பெண்களை ஒடுக்க துடித்த தாலிபான்களை எதிர்க்க துணிந்துவிட்டனர் பெண்கள்! சட்டம் ஒழுங்கு எதுவுமில்லை;  கேள்வி கேட்க முடியாது; தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! யார் உயிருக்கும் உத்திரவாதமில்லை. யார் வீட்டுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை ...