ஆட்சி முடியும் காலம் நெருங்குவதால், இனி கட்சியைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் தான் தலைமையை உறுதி செய்யமுடியும் என்று ஒ.பி.எஸ் திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். தென் மாவட்டங்கள் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஓ.பிஎஸ்! கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகளை ஒவ்வொரு சனி, ஞாயிறும் சந்திப்பதோடு பொதுக் கூட்டங்கள் நடத்துவதென்றும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தென் மாவட்ட தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர் .ஜெயலலிதா படம் முன்பக்கமாகவும், தானும், ஜெயலலிதாவும் இருக்கும் படம் பின்பக்கமாகவும் போட்டு ஒரு லட்சம் பனியன்கள் தருவதென்று முடிவு செய்துள்ளாராம்! தன் மகன் ரவீந்திரநாத்திடம் இது ...