ஒ.பி.எஸ்சின் ஊசலாட அரசியலுக்கு உண்மையிலேயே உதை கொடுத்து சென்றுள்ளார் மோடி என்று தான் சொல்ல வேண்டும். இது வரை ஒ.பி.எஸ்சின் மீது தான் பாஜக தலைவர்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து வந்தனர். ஆனால், அவரது இரண்டுங்கெட்டான் நடவடிக்கைகள் காரணமாகவும் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது ஆளுமை வெகுவாக பலவீனப்பட்டு வருவது காரணமாகவும் தற்போது ஒ.பி.எஸ் மீது ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர் கேள்வியே இல்லாமல் ஆதரித்து இ.பி.எஸ் ஒத்துழைப்பு நல்குவதாலும், எள் என்பதற்கு முன்பு எண்ணெய் கொண்டு நிற்பதாலும் ...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு இறுக்கம் அதிமுகவிற்குள் நிலவுகிறது! பன்னீரின் வெளிப்படைத் தன்மை இல்லாத மறைமுகமான சசிகலா ஆதரவு போக்குகள் ஒருபுறம், சசிகலா தமிழகம் வந்தால் கட்சிக்குள் என்ன நடக்கப் போகிறது..யார் உறுதியுடன், கட்டுக் கோப்புடன் நிற்பார்கள் அல்லது போவார்கள் என்ற குழப்பமான சூழல்! எடப்பாடிக்கா? சசிகலாவிற்கா? யாருக்கு ஆதரவு தருவதன் மூலம் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த முடியும் என்ற கணக்கு அதன் மேலிடத்திற்கு…? நான்கு வருடம் ஆட்சியை கவிழாமல் காப்பாற்றிவிட்டார் பழனிச்சாமி! ஒரு பக்கம் ஒ.பி.எஸ்சையும், மறுபக்கம் மத்திய ஆட்சியாளர்களையும், மற்றொரு பக்கம் ...