புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...