நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. ...