இந்தியா முழுமையும் ‘ஹிஜாப்’ விவகாரம் பற்றி எரிகிறது! இந்த நிலையில் இதை எப்படி அணுகுவது, புரிந்து கொள்வது… என்பது குறித்து இந்தியாவின் மிக முக்கிய பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடுள்ளனர். மாணவர்களிடையே  பொருளாதாரரீதியில் வேறுபாடு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை  கொண்டுவரப்பட்டது;  கலாச்சார ஒற்றுமையை உருவாக்க அல்ல’ ஹிஜாப் அணியாத பெண்களை குறிவைத்தும், முஸ்லிம் மாணவிகளை தடுத்தும் நடக்கும் வெறுப்பு அரசியலை எதிர்த்து, பெண்ணிய அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும், தனிநபர்களும் விடும் கூட்டறிக்கை: # கடலோர கர்நாடக பகுதியில், வகுப்பறையிலும்,  ...