‘எமக்குத் தொழில் கவிதை’ என்று தன்னுடைய தொழிலைப் பற்றிப் பிரகடனப்படுத்திக் கொண்ட பாரதி இதழியல் துறைக்குள் வந்தது தற்செயலாகத்தான். காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பிய பிறகு எட்டையபுர மன்னருக்குத் தினமும் பத்திரிகைகளைப் படித்து, அதிலுள்ள செய்திகளைப் படித்துச் சொல்லும் வேலை பார்த்து விட்டு, மதுரை, சேதுபதி பள்ளியில் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வேலை பார்த்து, அந்த வேலையும் முடிவுக்கு வந்தபோதுதான் அவருடைய 22ஆம் வயதில் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதனால், சமகாலத்துடன் நெருக்கமான உறவு கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியது. இதழியல் ஊடகம் இப்போது பரபரப்பு என்கிற ஒரே ...