ஒன்னுமே புரியல, இந்த ஆக்சிஜன் அரசியலில்! என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது…! இத்தனை பெரிய இந்தியாவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர யாருமில்லை என அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர். வாழ்க ஜனநாயகம்! ”அவர்கள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் செய்ய வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே செய்ய வேண்டும்’’ என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த அனுமதி தரலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தான் அனைவருக்கும் ...
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., அயோத்தி, காசி, மதுரா..என்று ஒவ்வொரு அஜெண்டாவையும் அரங்கேற்றிச் செல்கிறது பாஜக அரசு..! இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! அதில் விருப்பமில்லாத அரசுக்கு எத்தனை ஆண்டு அவகாசம் தந்தாலும், எத்தனை பெருந்தொற்று வந்து எத்தனை பேர் மடிந்தாலும் அது எதையும் கற்காது! காலரா, ...