ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது! ‘ பட’ மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை, அவரது அலுவலகத்திலேயே பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். ...