கொடூர வான்வெளித் தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது! நொறுங்கி விழும் கட்டிடங்கள், பற்றி எரியும் குடியிருப்புகள், பலியாகும் மனித உயிர்கள், படுகாயமுற்றவர்கள்..என்ற அவலம் தொடர்ந்து கொண்டுள்ளது…! இது வரை 72,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்..! என்ன நடக்கிறது..? உலகத்தின் மிகப் பெரிய செல்வந்தர்களும், அதிகாரமிக்கவர்களுமான யூதர்கள் பாலஸ்தீன மண்ணில் வலிந்து குடியேறினர். அப்படி குடியேறிய அந்த பகுதிக்கு இஸ்ரேல் என்று பெயர் வைத்துக் கொண்டனர் யூதர்கள்! பாலஸ்தீனியர்களின் பூமியான கிழக்கு ஜெருசலத்தை 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றியதில் இருந்து ...