1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து,  பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி, திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கிறது திமுக அரசு.  வாழ்வாதாரம் தரும் விளை நிலத்திற்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர் மக்கள்! விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து பாலியப்பட்டு ஊராட்சி கிராமசபை, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்காமல், பலன்தரும் விளைநிலங்களில் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து, விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 100 வது நாளை எட்டவுள்ளது. திருவண்ணாமலை என்றதும் நமக்கு ஞாபகம் வருவது  அண்ணாமலையார்தான்.  அவரை ...