இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...

டாஸ்மாக் மதுவை எதிர்த்துப் போராடி மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏதேனும் வாக்குறுதி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. டாஸ்மாக் மதுவில் ஆல்ஹாகால் 42% உள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு தான் கள்ளில் உள்ளது. ஆகவே, டாஸ்மாக்கிற்கு மாற்றாக பனங் கள்ளை பயன்படுத்த அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது என்பதை ...

உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…?  விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்!  சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான  செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை ...