எப்போதோ அமைக்கப் பட்டிருக்க வேண்டியது! என்றோ கொண்டாடப்பட்டு இருக்க வேண்டியவர்! என்றென்றும் நாம் நினைவில் வைத்து பின்பற்றத் தக்க முன்னோடி அயோத்திதாசருக்கு தற்போது தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க போவதாக அறிவித்து உள்ளது! தமிழ் நாட்டின் மாபெரும் பகுத்தறிவு சிந்தனையாளர், புரட்சியாளர்,மானுட தர்மத்திற்காக வாழ்ந்தவர், மனு தர்மத்தை எதிர்த்த தீரர். முன்னோடி பத்திரிகையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மிக, மிக காலதாமதமாக தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது என்றாலும், இப்போதாவது – அவரது 175 பிறந்த ஆண்டிலாவது சாத்தியப்பட்டுள்ளது – என்பதில் – மகிழ்ச்சியாக உள்ளது. ...