மகிழ்ச்சி, வெள்ளை அறிக்கையின் மூலம் ஒரு விவாதத்தை, விழிப்புணர்வை விதைத்தற்கு! பி.டி.ஆர்.தியாகராஜனின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சல்யூட்! ஐயோ..இவ்வளவு கடனா..? இவ்வளவு நெருக்கடிகளா..என வியக்கும் போது, இந்த விபரீதங்களுக்கு வித்திட்டது யார்..? அதிமுக மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பாகுமா..? ஒரு வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தன்னை வெளிப்படைத் தன்மைக்கு இந்த அரசு தயார்படுத்திக் கொண்டுள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே! சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்வதன் மூலம் தாங்களும் அதே பாதையில் பயணிக்க நேர்ந்தால் கேள்விக்கு உள்ளோவோம் என இவர்கள் உணர்ந்திருப்பார்கள் தானே! தமிழக நிதிஅமைச்சர் ...