தமிழகத்தின் மிக அதிக ஏரிகள் (381) நிறைந்த மாவட்டமாகவும், மத்திய அரசின் தொல்லியல் துறையால்  பாதுகாக்கப்பட வேண்டிய பல தளங்களை கொண்டுள்ளதும், இயற்கை வளங்களின் கேந்திரமாகவும் விளங்கும் இந்த பிரதேசத்தை  விமான நிலையத்திற்காக கற்பனையாகக் கூட கை வைக்க வாய்ப்பில்லை என்கின்றன சூழலியல் சட்டங்கள்; தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்காக விழுங்கப்படவுள்ள பிரதேசமானது, மத்திய அரசின் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள  தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய 160 தளங்களில் 104-ஐ தன் வசம் கொண்ட வரலாற்று பெருமை உடையது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாற்று பெருமையாகும். கரிக்கிலி ...