பொதுவாக பத்திரிகை ஆசிரியர்கள் அதிகார மையங்களிடமிருந்து சற்று விலகி இருந்தால் தான் வாசகர்களுக்கு சமரசமற்ற வகையில் செய்திகளைத் தர இயலும்! ஆனால்,சமீபத்தில் இந்து குழுமத்தின் ஆசிரியரான மாலினி பார்த்தசாரதி பிரதமர் மோடியை வலிந்து சந்தித்துள்ளார். இதன் மூலம் தன் சார்பு நிலையை அவர் பகிரங்கபடுத்துகிறாரோ.. என எண்ணத் தோன்றுகிறது! மோடி ஆட்சியில் ஏறத்தாழ 55 பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான தாக்குதல், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றினால் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த ...