9,000 கோடிகள்! அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள்..ஆகிய முக்கூட்டுக் கொள்ளைக்காகவே மேக்கேதாட்டு அணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் காங்கிரஸ், பஜக, மஜத ஆகிய கட்சிகள் தமிழகத்தை எதிர்த்து தங்களை ஹீரோவாக்கிக் கொள்ள மேகேதாட்டுவிற்கான போராட்டங்களை செய்கிறார்கள்! அதாவது ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன அன்றி இதில் பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காகவல்ல! சமீபத்தில் கர்நாடகவில் இழந்து கொண்டிருக்கும் தன் செல்வாக்கை மீட்க  காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை ...

ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள்..என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக நகராட்சி தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் அதிர்ச்சியளிக்கின்றன! இவற்றைப் பார்க்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கும், உரிமைக்கும் பல ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் நம்மைப் போன்றவர்களுக்கு அயர்ச்சியே ஏற்படுகிறது! நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்கு தரும் அங்கீகாரமா உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்! இது தொண்டு செய்வதற்கான ...

க.செபாஷ்டின், வேலூர் எட்டி உதைக்கும் பாஜகவின் பாதங்களை தட்டிவிடத் தைரியமின்றி தவிக்கிறதே அதிமுக தலைமை? களவாணிகளை எப்படி நடத்துவது என்பது காவல்துறைக்கு கைவந்த கலை! கையூட்டுக் பெற்றாலும், காவல்துறை அதன் புத்தியை காட்டும் என்பதால், களவாணிகளுக்கும் தெரியும் தங்கள் நிலை! வேறொன்றும் சொல்வதற்கில்லை. அ.அறிவழகன், மயிலாடுதுறை உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துகிறதே திமுக? உள்ளூர் கட்சிக் கட்டமைப்பில் பலவீனமாக உளுத்துப் போய் கிடக்கும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட தனித்து களம் காண முடியாத நிலையில்…, ‘உதாசீனப்படுத்தப்பட்டாலும் கூட ஓடிப் போய்விடமாட்டார்கள்’ என்பது ...

ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது. இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் ...

அடேங்கப்பா.. ஆடிய ஆட்டமென்ன..? பேசிய பேச்சுக்கள் என்ன…? கட்டமைத்த பிம்பங்கள் என்ன…? எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு தந்துவிட்டார்கள்! தன் சுயபலத்தை உணராத இந்த சூனியத் தலைமைகள் ஏதோ தமிழகத்தின் எதிர்காலத்தையே தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் போல – வெற்றி தோல்விகளே இவர்களிடம் விலாசம் வாங்கித் தான் பயணிக்கும் என்பது போல – அளந்துவிட்டார்கள்! அதுவும் இந்த தேமுதிக காட்டிய திமிர் இருக்கே..! அப்பா, யப்பா அப்பப்பா…! ஆனானப்பட்ட கேப்டனே ஆப் ஆயிட்டாரு எனும் போது இந்த அல்லகைகள் அமைதி காத்து அடக்கமாக இருந்திருந்தால் கூட, ...