‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பது ‘எதிர்கட்சிகள் இல்லாத இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏக்களை விலை பேசி, ஆட்சியை கவிழ்த்து  அதிகாரத்திற்கு வருகிறது பாஜக! அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை பாஜகவிற்கு அடியாள் வேலை செய்கிறதா..? ஆகஸ்ட் 17 அன்று இமாச்சல பிரதேசத்தை சார்ந்த லக்வின்தர் ரானா மற்றும் காஜல் என்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினர். மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக சில நாட்களுக்கு முன்தான் காஜல் நியமிக்கப்பட்டார் என்பது ...

ஜனநாயகம் என்பது பொது நலன் சார்ந்து ஒன்றுபட்டு செயலாற்றுவது! ஆனால், தன்நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தற்குறிகளான சில சந்தர்ப்பவாதிகள் கைகோர்த்து செய்யும் சதிசெயலைத் தான் ஜனநாயகம் என்பதாக  நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்! முதலில் தெரியாத்தனமாக நானும் கூட நம்பிவிட்டேன். அடடா, இதுவல்லவோ ஜனநாயகம்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்! அப்படியான சட்டவிதியை தற்போது ஏற்படுத்தி உள்ளார்களாம்! பத்திரிகைகள் இது பற்றி பலவாறாக எழுதின! ”இது எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்திற்கு வைக்கப்பட்ட செக்” என ஒரு பத்திரிகை எழுதியது. ”ஒ.பி.எஸ் ...