தனிப்பட்ட வகையில் இறை நம்பிக்கையும்,பிரார்த்தனையும் எளிய மனிதர்கள் வாழ்க்கைக்கு மாபெரும் தன்நம்பிக்கை தருகின்றன! ஆனால், அதுவே மதபோதகர்கள்,சாமியார்களுக்கு ஏமாற்றி பணம் ஈட்டும் வழிமுறையாகிவிடுகின்றன! டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தை பொறுத்தவரை பாஜகவின் தலைவர்களோடு,குறிப்பாக அத்வானி,மோடியுடனேயே நேரடி தொடர்பு கொண்டு தங்கள் மோசடி ஆன்மீக வியாபாரத்திற்கு தடையில்லாமல் அனுசரணையோடு தான் இருந்து வந்தனர்! அதையும் மீறி சமீபத்தில் ரெய்டு நடந்திருக்கிறதென்றால்…அதன் பின்னணிகளை பார்க்க வேண்டும்! டி.ஜி.எஸ்.தினகரன் குடும்பத்தினர் கடந்த சுமார் அரை நூற்றாண்டாக கோடானுகோடி மக்களின் துன்பங்களையும்,துயரங்களையும்,தீரா வலிகளையும் மேடைதோறும் கூவிக் கூவி விற்றனர்! துன்பத்திற்கு ஆளானவர்களையே ...