பல நேரங்களில் இவரது தீர்ப்பை படிக்கும் போது நீதித்துறையின் மீது மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் மீதே ஒரு நம்பிக்கை பிறக்கும்! ”எளிய மக்களின் ஏக்கங்களையும், நோக்கங்களையும் உள் வாங்கி அவர்களின் மனசாட்சியாக இவர் வெளிப்படுகிறாரே..!” என்று வியந்த  நிகழ்வுகள் பற்பல! நீதித் துறையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் புரிந்து கொள்ளாமல் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு சொல்லக் கூடியவர்களை பார்த்தும், கேட்டும், வெறுப்பும், விரக்தியும் அடைந்த பெருந்திரளான மக்களின் மாற்று எதிர்பார்ப்பாக நீதிபதி என்.கிருபாகரன் வெளிப்பட்டார். சில நீதிபதிகள் சமூகத்தில் இருந்து ...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறித்து பல உலக நாடுகளும், ஐ.நா சபையும் அச்சம் தெரிவித்து வருகின்றன. ”அங்கு தற்போது மக்கள் சந்திக்கும் பேராபத்து உலக நாடுகளுக்கே அசிங்கம், பெரும் தோல்வி” என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். ”அமெரிக்கா ஆப்கான் மக்களை அந்தோவென கைவிட்டுவிட்டது. இது மாபெரும் துரோகம்” என இங்குள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள்! ”இனி’ ஆப்கானில் கொலைகள் நடந்தேறும்,கொடூரங்கள் நடந்தேறும்” என பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்! இப்படியான பார்வைகள் சில யதார்த்தங்களை உணராமல் அல்லது உள் வாங்க விரும்பாமல் வெளிப்படுகின்றன ...

ஒரு பத்திரிகையாளனாக இருந்தாலும், தற்போது தொலைகாட்சி பார்ப்பதை பெருமளவு தவிர்த்து வருகிறேன்! அப்படியே பார்க்க நேர்ந்தாலும் கொரோனா தொடர்பான செய்திகள், காட்சிகளே தொடர்ந்து வந்தால் சேனலை வேகமாக மாற்றி விடுகிறேன். செய்திகளில் 90 சதவித்தை கொரானா பரவலுக்கு ஒதுக்கியுள்ளன ஊடகங்கள்! கொரானா தவிர்த்த எதுவும் தற்போது அவர்களுக்கு முக்கிய செய்தியாக தெரிவதில்லை போலும்..! மறுக்கவில்லை. தற்போது கொரானா செய்திகள் தவிர்க்க முடியாதவை தான்! ஆனால், ‘எந்த அளவுக்கு அவற்றைச் சொல்ல வேண்டும்?’ ‘எந்தப் பார்வையில் அவற்றை அணுக வேண்டும்.’ ‘எந்த தொனியில் அவற்றை வெளிப்படுத்த ...