யாகம், வேள்வி என்பவை இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டதா? அல்லது அச்ச உணர்வை பணமாக்கும் பிழைப்புவாதிகள் சம்பந்தப்பட்டதா? யாகங்களால் நடக்கவுள்ள எதையும் தடுக்க முடிந்திருக்கிறதா? ஜெயலலிதா, சசிகலா நடத்திய யாகங்கள்! சபரீசன் யாகம் நடத்தியதன் பின்னணி என்ன? நோக்கங்கள் என்ன? யார் ஒருவருக்கும் உள்ள இறை நம்பிக்கையை நாம் விமர்சிப்பது தேவையற்றது என்பதை ஏற்கலாம். ஆனால், பெரும் பொருட்செலவில் நெய்யையும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்தவற்றையும் நெருப்புக்கு அர்ப்பணிக்கக் கூடிய – பல லட்சங்கள் பார்ப்பனர்களுக்கு தட்சணையாக தரக் கூடிய – யாகம், வேள்விகள் ...