கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்திற்கு தன் சிந்தனையாளும்,சீரிய எழுத்துக்களாலும், தீவிர செயல்பாட்டுகளாலும் ஆனைமுத்து அய்யா அளவுக்கு பங்களித்த இன்னொருவரைச் சொல்ல முடியாது! இது உண்மை,வெறும் புகழ்ச்சியல்ல! எந்த ஒரு பொருளாதாரப் பின்புலமும் இன்றி அவர் சாத்தித்தவை பிரமிக்கதக்கவையாகும்…! பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் சிறப்பாகத் தொகுத்து,முதன்முதலில் பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என முப்பெரும் தொகுதிகளாக்கி 1970 களில் இவர் கொண்டு வந்த தொகுப்பு நூல் தான் தமிழ் நாட்டில் பல இளம் சிந்தனையாளர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் பெரியாரை சரியாக அறிமுகப்படுத்தியது. இத்துடன் நிற்காது 2010 இல் ...
குஷ்புவின் பொய்கள்…..ஒன்றா, இரண்டா? பொய்,புரட்டு,வேஷம்…இதுவே அரசியல்! பணம்,பதவி,அதிகாரம் இதுவே குறிக்கோள்…! இதுவே இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு நமக்கு தந்துள்ள செய்தியாகும்! ’’நாட்டுக்கு நன்மை செய்வதற்குத் தான் கட்சியில் சேர்ந்துள்ளேன்…’’ ’’எனக்கு ஐந்து நாட்கள் தான் சூட்டிங்…மற்ற இருபத்தி ஐந்து நாட்கள் என்னை ஏன் கூட்டத்திற்கு காங்கிரஸார் அழைக்கவில்லை…’’ ’’இருக்கும் வரை இருந்த இடத்திற்கு விசுவாசமாக இருந்தேன்…’’ ’’என்னைய அவங்க நடிகையா தான் பார்த்தாங்க…அரசியல்வாதியாகப் பார்க்கலை..இதுல இருந்தே அவங்க( காங்கிரஸ்) சிந்தனையை நீங்க புரிஞ்சிக்கலாம்…’’ ’’என் பேச்சைக் கேட்க, எனக்காக மக்கள் கூட்டம் கூடும்’’ ’’நான் பத்து வருஷமாக அரசியலில் இருக்கேன்…எங்கேயாவது என் கூட என் கணவரைப் பார்த்திருக்கிறீர்களா’’ ’’நான் ...