கேரள அரசியலில் முன் எப்போதுமில்லாத மாற்றங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த தேர்தலில் கடவுள், சாதி, மத ரீதியிலான வாக்குகளை குறிவைத்தே எல்லா கட்சிகளின் பிரச்சாரங்களும் அமைந்தன…!இது வரை காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் என்ற இருதுருவ அரசியலில் உழன்ற கேரளா.., தற்போது மூன்று துருவ முக்கோண அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது…! மேற்குவங்கத்தில் எப்படி ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளும்,காங்கிரசாரும் கிட்டதட்ட சம பலத்தில் இருந்தனரோ…, அதே போலத் தான் கேரளாவிலும் இதுவரையிலும் இருந்தனர். ஆனால், கேரளாவில் இந்த தேர்தல் முடிவுகள் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை ...