கேரளாவில் இரண்டு வார நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு பினராய் விஜயன் மந்திரி சபை தற்போது பதவி ஏற்றுள்ளது! பதவி ஏற்கும் முன்பே ஒரு அரசாங்கம் இவ்வளவு கடும், விமர்சனங்களையும், அதிருப்தியையும் இதற்கு முன்பு பெற்று இருக்குமா.. தெரியவில்லை! ஆட்சியில் இருந்த ஒரு அரசாங்கம் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதென்றால், அது அந்த அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு மக்களிடையே கிடைத்த அங்கீகாரம் தான்! அப்படி அந்த அரசாங்கத்திற்கு மக்கள் தந்த அங்கீகாரம், ”சிறப்பாக செயல்பட்ட அனைத்து அமைச்சர்களுக்குமானதா?’’ அல்லது ‘’ஒற்றை முதலமைச்சருக்கானதா?’’ என்பது தான் தற்போது ...