இந்துக்களின் பாரம்பரிய புனித வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை எவ்வளவோ  பாதுகாக்கப்படாமல் சிதைந்து வருகின்றன! ஆனால், இஸ்லாமியர்களின் மசூதிகளுக்குள் இந்து கடவுளர்களை தேடுவோர்களுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களோடு, நமது நீதிமன்றங்களும் ஆதரவு தந்து வருவதை அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; உத்தரப்பிரதேசம் சாம்பலில் உள்ள ஜமா மசூதியை பாதுகாக்க  இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் ஐந்து இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம், தீ வைப்பு, துப்பாக்கி சூடு ..என சமூக அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்​பட்​ட​தாகவும், இங்கு விஷ்ணு​வின் கடைசி ...