‘இந்த இ.எஸ்.ஐ எல்லாம்இனி தேவையில்லை. தொழிலாளர்கள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு போகட்டும்’ என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் ஆர். நடராஜன் நேர்காணல். தமிழகத்தில் மட்டுமே 18,000 க்கு அதிகமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயில் இணைந்து பலன் பெற்று வருகின்றனர். இந்தியா முழுமையிலும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மருத்துவப் பலன்களை பெற்று வருகின்றனர். ”பாஜக அரசு கொண்டு வந்துள்ள Code on Social Security, ...