புலமைப்பித்தன் திராவிட இயக்கத்தின் தீப்பிழம்பாய், தென்றலாய் வெளிப்பட்டவர்! ஆழ்ந்த தமிழ் புலமையோடும், ஆர்ப்பாட்டமற்ற எளிமையோடும் வலம் வந்தவர். சற்றே நெகிழ்ந்து கொடுத்திருந்தால் இன்னும் ஆயிரம் பாடல்கள் எழுத வாய்ப்பு பெற்று இருப்பார்! ஆனால்,சென்டிமெண்ட் நிறைந்த சினிமா உலகில் பகுத்தறிவு சிங்கமாக இயங்கியது எப்படி..? மிக ஆழமான தமிழ்புலமையில் புலமைப்பித்தனை மிஞ்ச திரைக் கவிஞர்களில் யாருமில்லை எனலாம்! சங்கத் தமிழ் சந்தத் தமிழாக அவரிடம் வெளிப்பட்டது. திரைபாடல்களில் இலக்கிய நயத்தை பொழிந்தவர்! டப்பாங்குத்துப் பாடல்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வரிகளோ இவர் திரைத் தமிழில் ...
”ஒருவரின் தனிப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அவரது இலக்கிய, கலை ஆளுமை திறமைக்கான விருதினை தரக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.. ”என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது!. பாடகி சின்மயி உட்பட பதினேழு பேர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் செய்துள்ளனர். இது தெரிந்தும் அவருக்கு எப்படி விருது வழங்கலாம் என்ற பெண்களின் வலியை இப்படித் தான் மடார் என ஒரே போடில் தவிடு பொடியாக்கிவிடுகின்றனர்,சிலர்! மேம்போக்காக பார்க்கையில் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வைரமுத்துவுக்கு தரப்பட்ட விருது கார் ...