13 பேர்  கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக  நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன் திரண்டு கதறி அழுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பியவர்களை, கல்லூரி மாணவர்களை, கடை வீதிக்கு சென்றவர்களை பொய் வழக்கில் கைது செய்து பொய் வழக்கு போட்டது அம்பலம்! ஆனால், இது தொடர்பாக களத்தில் இறங்கி முக்கிய ஊடகங்கள் உண்மைகளை வெளிக் கொணராமல் ஊமையாக உள்ளனர். பாலிமார் தொலைகாட்சி மட்டும் அப்பாவிகளின் பெற்றோர் குமுறலை ஒரே ஒரு முறை மேலோட்டமாக காண்பித்தது! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ...

கள்ளக் குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் விரும்பத்தாக வன்முறை வெடித்தது வருத்தத்திற்குரியது. ஆனால், நடந்த வன்முறைக்கான பழியை ஒட்டு மொத்தமாக அறச் சீற்றத்துடன் அணி சேர்ந்த மக்கள் மீதும், முற்போக்கு இயக்கங்கள் மீதும் போட்டு, சகட்டுமேனிக்கு கைது செய்வதன் மூலம் தங்கள் பலவீனங்களை அரசு நிர்வாகமும், காவல்துறையும் மறைத்துவிட்டு, யார், யாரையோ திருப்திபடுத்த துடிக்கின்றனவா? அநீதிக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள், வன்முறை கும்பல் என்ற அடைமொழிகளில்  முக்கியமான மெயின்ஸ்டீரிம் பத்திரிகைகள் எழுதுகின்றன. 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு பள்ளி மக்களிடம் ...

காவல்துறை என்பது ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே கட்டமைக்கப்பட்டு உள்ளது! இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இன்னும் இங்கு காவல்துறைக்கு வரவில்லை. நிலப் பிரபுத்துவ பண்ணைச் சமூக மனநிலையில் உழலும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான காவலர்களை ஆர்டர்லியாக வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்! சுமார் 45,000 ரூபாய் அளவுக்கு சம்பளம் பெற்று வரும் காவலர்கள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ள தருணத்திலும் கூட மக்கள் பணி செய்ய முடியாமல் உயர் அதிகாரிகள் வீட்டில் தோட்டப் பணிகள், வீட்டு வேலைகள், காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு ...

வாகன ஓட்டிகள் மீது சென்னை பெருநகர காவல்துறைக்கு திடீரென பொத்துக் கொண்டு அக்கறை வந்துவிட்டது! எப்படியாவது சாலை விபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றியே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டனர். அடடா, அவர்களின் கருணைக்கு எல்லை ஏது? சென்னையில் இன்று எங்கெங்கும் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து ஓரம் கட்டி ஜரூராக பண வசூல் செய்தனர். எல்லாம் மக்கள் உயிர் மீதுள்ள அளப்பரிய அக்கறை தான் போங்கள்! நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்! சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் ...

காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்களே கதை! காவல்துறையின் மூர்க்கத்தனத்தின் பின்னணி, அதிகாரிகளின் ஈகோ, ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வும் கட்டமைக்கப்படும் நுணுக்கம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடித்த வகையில் இது வரை சொல்லப்படாத கதைக் களமாகும்! ‘டாணா’ என்றால் காவல்நிலையம் என்று  பொருள் . டாணாக்காரன் என்பதை காவல்காரன் என்று சொல்லலாம். விக்ரம் பிரபு காவலர் பயிற்சிக் பள்ளியில் சேர்வதில் கதை தொடங்குகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் பணிபுரிந்த தமிழ் இப்படத்தில் இயக்குநராக ...

காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் மத நல்லிணக்கத்துக்கான  ‘மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால்,கோவையில் மட்டும் அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது..! தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்பது பல கட்சிகள், பொது அமைப்புகளின் சேர்வையாகும்! இதன் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்’ எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டன! மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் ...

அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..! காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான  உதாரணங்கள்  நிறையவே வெளிப் படுகின்றன! இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந்தன? ரஜினியின் அலெக்சாண்டர், கமல் ...

அப்துல்லத்தீப், ராணிப்பேட்டை, வேலூர், சி.பி.ஐ, அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப அதிகரிக்க பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதே? பதவி நீட்டிப்பு வேண்டுபவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்கள்! சட்டம், நீதி, தர்மம் எனப் பேசும் அதிகாரிகளுக்கு ஆட்சியாளர் போடும் தூண்டில்! எதிர்ப்பவர்களை வேகமாக  இன்னும் சிறையில் தள்ளுவார்கள்! ஜான் ஜேக்கப், நாகர்கோவில், கன்னியாகுமரி திருச்சி அருகே படுகொலையான காவலர் குடும்பத்திற்கு யாரும் கேடாமலே ஒரு கோடி நிதி அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், கொரானாவை ...

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை அறிவித்துள்ளார். இப்படி ஒரு உத்தரவை ஒரு டிஜிபி தன்னிச்சையாக போட முடியுமா..? போட்டாலும் அது நடைமுறைக்கு வருமா..? என காவல்துறையிலேயே பலர் சந்தேகிக்கிறார்கள்..? வாராந்திர விடுமுறை என்பது மிக அவசியமானது. தேவையானது. ஆனால், அதை ஒரு முதலமைச்சர் மட்டுமே முடிவு எடுத்து சொல்ல முடியும். விளம்பர வெளிச்சத்திற்காக ஒரு டிஜிபி வரம்பு மீறி செயல்படுகிறாரோ..? ஏனென்றால், காவலர்களுக்கு வாராந்திர விடுமுறை வழங்க வேண்டும் என்பது பல்லாண்டுகால கோரிக்கை. இது தொடர்பாக நீதிமன்றமே பரிசீலிக்க ...