எது நடக்க வேண்டும் என்று இந்த அரசு காத்திருந்ததோ..,அது இன்று நடந்தேறிவிட்டது! தேசபக்தி என்பது குடியரசு தின நிகழ்ச்சிகளில் ஆடும் ஆட்டம்,பாட்டம், காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்திகளில் மட்டும் தான் வெளிப்பட வேண்டும் என்பதல்ல! ஆட்சியாளர்கள் மேற்பார்வையில் அவர்களுக்கு கட்டுப்பட்டு வெளிப்படுவதல்ல, தேசபக்தி! விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பு அரசாங்க அணிவகுப்பைவிட பிரம்மாண்டமானதாக – 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததையும் –  சுமார் 3000 தன்னார்வலர்கள் அதை ஒழுங்குபடுத்தி வந்ததையும் – அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை…! பெண்களும் டிராக்டர்களை ஓட்டி ...