ஒரு நண்பர் எங்களிடம் இப்படிக் கேட்டார். “உள்ளாட்சித் தேர்தலின் போதுதானே உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வைக்கவேண்டும்? இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக உள்ளாட்சிக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?” என்று. தன்னாட்சி, அறப்போர், Institute of Grassroots Governance (IGG), மக்களின்குரல் (Voice of People) மற்றும் தோழன் போன்ற  இயக்கங்கள் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையை,  அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நேரில் சந்தித்தும், சமூகஊடகங்கள் மூலமாகவும் நாங்கள் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருவதனால் நண்பர் ...

டாஸ்மாக் மதுவை எதிர்த்துப் போராடி மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏதேனும் வாக்குறுதி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. டாஸ்மாக் மதுவில் ஆல்ஹாகால் 42% உள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு தான் கள்ளில் உள்ளது. ஆகவே, டாஸ்மாக்கிற்கு மாற்றாக பனங் கள்ளை பயன்படுத்த அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது என்பதை ...