எதிர்பார்க்கப்பட்டது தான்!  கூடா நட்பு கேடாய் ஆனது. ஓடாய் தேய்ந்தது நிதிஸ் கட்சி! ஜனதா தளத்தின் அடையாளத்தையே அழித்து , பாஜக செய்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் தொடர்ந்தால், ‘இருப்பதையும் இழப்போம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் நிதீஸ்.  என்னவெல்லாம் நடந்தன பீகாரில்? உரிமையை இழந்தவராய், மெள்ள,மெள்ள ஒடுக்கப்பட்டவராய் பெயருக்கு முதல்வர் பதவி வகித்தார் நிதீஸ். பீகாரில் நடந்தவை என்ன? பாஜக நிதிஸூக்கு தந்த தொல்லைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். பாஜகவை விட்டு விலகி வந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு ராஷ்டிரிய ...

போலித்தனம், பொய்மை, வாய்ச் சவடால், திறமையின்மை ஆகியவற்றின் அடையாளமாகிப் போன போரீஸ் ஜான்சன், பிரிட்டனை வரலாறு காணாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்! ஊழல் அரசியல்வாதியை உடனே தூக்கி எறிந்தனர், பிரிட்டிஷ் மக்கள்! ஜான்சனின் மூன்றாண்டு ஆட்சி குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவழியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்து விட்டார். 50க்கும் மேற்பட்ட தனது கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில் ...

ஒரே இந்துத்துவ கொள்கையால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா உறவு பூண்டு, கூட்டணி கண்டது. ஆனால், 25 ஆண்டு கால நட்பில் தான் இளைத்தும், பாஜக பெருத்தும் வருவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டது! அதனால், பாதை மாறி, பயணத்தை தொடர்ந்தது! காத்திருந்த பாஜக, இன்று கருவறுப்பு செய்கிறது! 2019 ம் ஆண்டு நவம்பர் 23 அன்று மராட்டிய கவர்னர் பகத்சிங் கொஷியாரி அதிரடியாக அதிகாலை மூன்று மணிக்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசிய காங்கிரசை சேர்ந்த அஜீத் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  ...

பதவிச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக் குழுவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்த பன்னீர் அணி, கடைசி பிரம்மாஸ்த்திரமாக பொதுக் குழுவை தடுக்க கோரி காவல்துறையை நாடியுள்ளது! அதாவது, திமுக அரசின் தயவில், அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது! ”அதிமுக பொதுக் குழு நடந்தால் அதில் கலவரம் வெடிக்கும்” என பன்னீர் புகார் தருகிறார் என்றால், என்ன பொருள்? பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தன் ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று ...

உலகில் அடிமைத் தனத்திற்கு பேர் போனதில் தமிழ் சினிமா துறையை மிஞ்ச வேறொன்றில்லை. திரைத் துறைக்கு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம்.. எனப் பல சங்கங்கள் உண்டு. இவை எல்லாம் உதயநிதி என்ற ஒற்றை மனிதரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு பிழைப்பு நடத்துவதை என்னென்பது? இன்றைய தினம் திரைத் துறையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது எனக்காக! தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பது எனக்காக! என உதயநிதி நம்புகிறார்! இன்றைக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரெட்ஜெயண்டை மீறி வேறொரு நிறுவனத்தால் ரிலீஸ் செய்ய ...

கடுமையான பொருளாதார நெருக்கடி, தகுதிக்கு மீறிய ராணுவச் செலவுகள், ஊழல் நிர்வாகம்.. இதன் தொடர்ச்சியாக இம்ரான்கானின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது! மதவாத உணர்ச்சிகளைக் கடந்து, மக்கள் சரியான தலைவரை பாகிஸ்தானில் தேர்ந்தெடுப்பார்களா? ராணுவத்தின் சாய்ஸ் யார்? மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார் இம்ரான்கான்! பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான்  அரசுக்கெதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  இம்ரான் கட்சி உறுப்பினர்கள் சிலரே அணி மாறி ஆதரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் பதவி இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இம்ரானின் ” கடைசி பந்து ...

காங்கிரஸ்  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..?  2024 ல் மீண்டும்  படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா? எட்டு ஆண்டுகால  மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை ...

தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! அதிகார அரசியலில் முந்துகிறார் இ.பி.எஸ்! தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலாவை கேடயமாக்குகிறார் ஒ.பி.எஸ். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா? இல்லை, கதறடிக்குமா? ஒட்டுமொத்த கட்சியும் பொதுக் குழு கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட ஒ.பி.எஸுக்கு நன்றாகத் தெரியும். ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை ...

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம் உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான அமெரிக்க ஆதரவு பார்வையில் பத்திரிகைகள் ரஷ்யாவை சாடுகின்றன. நீங்கள் அமெரிக்கா பக்கமா? ரஷ்யா பக்கமா? உக்ரைனுக்கு நீண்ட கால நோக்கில் எது நல்லது, பாதுகாப்பானது என பார்க்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் உக்ரைன் இப் பிரச்சினையை கையாண்டிருந்தால் ரஷ்யா அத்துமீறி இருக்காது. அமெரிக்க,ஐக்கிய நாடுகள் வலையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு ரஷ்யாவிடம் பேரம் பேசி உக்ரைன் நலன்களை பேணி இருக்க வேண்டும். இது அண்ணன் தம்பி சண்டை! விரைவில் இருவரும் கைகோர்க்கவும் வாய்ப்புண்டு! ...

கிராம சபை எப்போ நடக்கும், அங்கு நம் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காணலாம்… என காத்திருந்த மக்களுக்கு, ஒருவழியாக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு   அக்டோபர்-2  ந்தேதி கிராம சபை நடக்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியாகவே இருந்தது! ஆனால், கிராம சபை என்பது அரசியல் கட்சிகளின் தாக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபு மீறப்பட்டு வருவது கவலையளிக்கிறது! ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பு என்பதே பிரதானம், அந்த வகையில் கிராம சபையில் மக்கள் பங்கேற்று அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை தெரியப்படுத்துவது, ஊராட்சியில் நடக்கும் ...