ஒன்று கூடல்,ஒன்றிணைந்து செயல்படுதல், தமிழ் சமூகத்தின் மீதான பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் திருவள்ளுவரை ஈன்ற மகத்தான சென்னை மண்ணிலே, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னெடுத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரான தமிழ் வணிகக் குழுக்கள் ஒன்றிணைந்து, பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது!தமிழர் வாழ்வியிலின் பல்வேறு கூறுகளையும்,அதில் பொதிந்துள்ள உண்மையான அர்த்தங்களையும் உணரும் வண்ணம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு நாள் நிகழ்வாக விழா கலைகட்டியது! சென்னையில் தமிழர் வணிகம்  பரிந்துரை(த.ப.வ) அமைப்பின் பத்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன .ராஜ்குமார் சண்முகத்தால் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் “வணிகத்தில் கோலோச்சுகிற ...