ஜார்ஜ் பொன்னையா மாதிரியாக ஒரு நாலு பேரு இருந்தால் போதும் தமிழ்நாட்டில் இந்துமதவெறி இயக்கங்களும், பாஜகவும் ஒகோன்னு வளர்ந்திடும்! அந்த மதவாத தீக்கு நெய்யை வாளி நிறைய வாரி,வாரி ஊத்தி இருக்கிறார் பாதிரியார். இப்படி எவனாவது பேச மாட்டமாட்டானான்னு தானே இந்துத்துவ அறிவு ஜீவிகளும் காத்திருந்தாங்க..! இந்த மாதிரி சம்பவங்களை மிக நுட்மாக ஊதி, ஊதி இந்துக்களை அணிதிரட்ட அவங்களை போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவங்களும் ஜமாய்க்கிறாங்க..! சோஷியல் மீடியாவெங்கும் பாதிரியார் விதைத்த வெறுப்பு பன்மடங்கு விஸ்வரூபமெடுத்து வியாபித்துள்ளது! இந்த விவகாரத்தில் கன்னியாகும்ரி ...