பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு துறைகளில் கடை நிலை ஊழியர் பணியிடங்களுக்கு கூட வட மாநிலத்தவர்களே சுமார் 90 சதவிகித இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்! அதுவும், அஞ்சல்துறையில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மிக அதிகம்! இது இப்போதும் தடையின்றி தொடர்வது எப்படி? தற்போது கூட அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணியில் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதற்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தந்த மண் சார்ந்த மக்களுக்குத் ...